திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை! நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, August 17, 2019

திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லை! நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தமிழக தம்பதிதமிழகத்தை சேர்ந்த தம்பதி வட இந்தியாவில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்தவர் ஜெயபாலன். இவர் மனைவி மாலினி கேசவன். இருவரும் ஒடிசாவில் வசித்து வந்த நிலையில் ஜெயபாலன் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

தம்பதிக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

ஜெயபாலனும், மாலினியும் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்தனர், இரண்டு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த சூழலில் வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசியது.


இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது ஜெயபாலனும், மாலினியும் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தனர்.

இருவரின் சடலங்களையும் கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து கடிதத்தை பொலிசார் கைப்பற்றினார்கள். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

இதனிடையில் பெற்றோர்கள் தங்களை மன்னித்துவிடுமாறு ஜெயபாலனும், மாலினியும் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இருவரின் இறப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது