வவுனியாவில் போதையில் கடும் மோதல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 13, 2019

வவுனியாவில் போதையில் கடும் மோதல்!வவுனியா - குருமன்காட்டில் நேற்று (12) இரவு இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருமன்காடு பகுதியில் நேற்று மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல், வாள், கத்திகள் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் இரு இளைஞர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்