நல்லூரில் நடமாடிய 3 முஸ்லிம்கள் கைது! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 13, 2019

நல்லூரில் நடமாடிய 3 முஸ்லிம்கள் கைது!



யாழில் உள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழா நடந்து கொண்டிருக்கும் போது ஆலய சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடித்திரிந்த 3 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களும் நேற்று இரவு 10 மணி அளவில் ஆலய வளாகத்துக்குள் நடமாடியதனால் சந்தேகத்தின் பேரில் குறித்த மூன்று முஸ்லிம் இளைஞர்களையும் கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும் கைதுசெய்யப்பட்ட மூன்று முஸ்லிம் இளைஞர்களும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில்  பகுதிகளை சேர்ந்தவர்கள்  எனவும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்