இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகமே – ஹக்கீம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 26, 2019

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகமே – ஹக்கீம்இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகம் எனவும், அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ள அமைச்சர், அங்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது ஒரு சிறிய கும்பலை கூழிக்கு அமர்த்தி நடத்தப்பட்ட பிர சக்திகளின் ஒரு அரசியல் நாடகமென்றே அந்த சமூகத்தை சேர்ந்த தலைவரென்ற அடிப்டையில் நான் கருதுகின்றேன்.

எனவே இந்த விடயம் தொடர்பாக சிறுபான்மை மக்களான தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அந்த பிரச்சினை மீண்டும் உருவாகாமல் இருக்க நாம் தற்போது கூடிய கவனத்தோடும் கரிசனையோடும் இருப்பது மாத்திரமல்ல, அரசாங்க புலனாய்வுத்துறையினரும் பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு இடமளிக்க மாட்டார்களென்ற நம்பிக்கையும் உள்ளது” என மேலும் தெரிவித்தார்.