தொழிலாளி வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஆணிகள் ~ அதிர்ந்துபோன மருத்துவர்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 6, 2019

தொழிலாளி வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஆணிகள் ~ அதிர்ந்துபோன மருத்துவர்கள்

கேரளாவில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட தொழிலாளி ஒருவரின் வயிற்றில் இருந்து நூற்றுக்கணக்கான ஆணிகள் அறுவை சிகிச்சை முலம் எடுக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில், 49 வயது மதிக்கத்தக்க ஒரு தொழிலாளிக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை திருச்சூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்பு அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் நோயாளியின் வயிற்றில் ஆணிகள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போயினர்.

அந்த ஆணிகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது வயிற்றில் இருந்து கிட்டத்தட்ட 100 க்கு மேற்பட்ட ஆணிகள் அகற்றப்பட்டன.

இது குறித்து அவரது உறவினர் ஒருவரிடம்  கேட்டபோது, அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது. அடிக்கடி வீட்டிற்கு தெரியாமல் வெளியே சென்று சுற்றிவிட்டு வருவார். இவ்வாறு சுற்றி திரியும் போது சாலை ஓரங்களில் கிடக்கும் இரும்பு ஆணிகளை எடுத்து முழுங்கி இருக்கிறார். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இது போன்ற செயலில் ஈடுபட்டு உள்ளார். தற்பொது அந்த ஆணிகளை எல்லாம் அறுவை சிகிச்சைகள் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என கூறினார்.