நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, August 29, 2019

நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்தியாவில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அரசிடம் நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணையின் போது,7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழக அரசின் பதில் வாதத்தில், முன் கூட்டி விடுதலை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது எனவும், அது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என தெரிவித்திருந்தது.

அதே போல, இந்திய அரசியலமைப்பு சட்டம் 361படி, தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும்,ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதாகவும்,7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும், வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று (29) அறிவித்த நீதிபதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி அரசுக்கு அனுப்பிய கடிதம் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்