இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது – சஜித் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 19, 2019

இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது – சஜித்



இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது என வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே இராணுவப் பாதுகாப்புடன் சேர்த்து பொருளாதாரம், சமூகம், அரசியல் பாதுகாப்பையும் நாட்டில் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அவர் கூறினார்.

மாத்தளையில் இன்று (திங்கட்கிழமை)  ‘ஸ்ரீமத் அலுவிஹாரகம’ வீடமைப்புத் திட்டத்தை, திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவப் பாதுகாப்புடன் மாத்திரம் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியாது. அபிவிருத்தியுடனான நாட்டை உருவாக்குவதற்காக, இராணுவப் பாதுகாப்புடன் பொருளாதாரம், சமூகம், அரசியல் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

நாட்டிலுள்ள சகல பிரிவுகளையும் பாதுகாப்பதற்கான தகுதி என்னிடம் இருக்கின்றது அத்துடன் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்.

இதேவேளை, எதிர்காலத்தில் பெண்களின் அடிப்படை பொருளாதார கொள்கைகள் கொண்ட நாட்டை உருவாக்கவுள்ளோம்.

நவம்பர் மாதத்தில் மக்கள் பெற்றுத்தரும் வரத்துடன், பெண்களை சேமிப்பு தொடர்பான விடயத்தில் ஈடுபடுத்தி, நாட்டின் அபிவிருத்திகளைப் பலப்படுத்தவுள்ளோம்” என கூறினார்