தொடர்ந்தும் அம்பலமாகும் கோத்தாவின் இருட்டு பக்கம்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Monday, August 26, 2019

தொடர்ந்தும் அம்பலமாகும் கோத்தாவின் இருட்டு பக்கம்?

கடந்த மே மாதம் கோட்டாபய ராஜபக்ச தனது இரட்டை பிரஜாவுரிமை தகவலை மறைத்து புதிய கடவுச்சீட்டு ஒன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் பெற்றுக் கொண்டது எவ்வாறு என்ற பிரச்சனை பல கோணங்களில் எழுப்பப்பட்டது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளது கருத்துப்படி இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் சாதாரண இலங்கை பிரஜையாக மாறுவதற்காக பிரஜைகள் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக கோரிக்கை பத்திரம் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறானதொரு கோரிக்கை பத்திரத்தை அனுப்பி வைக்காமல் தான் இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் என்பதை வெளிப்படுத்தாமலே புதிய கடவுச்சீட்டு ஒன்றை பெற்றுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பப்படிவம் அவசர தேவை என்ற அடிப்படையில் கடந்த மே மாதம் ஏழாம் திகதி மாலை 3 மணிக்கு பின்னரே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக மாலை 3 மணியின் பின்னர் எந்த ஒரு அவசர தேவையின் அடிப்படையிலும் கடவுச் சீட்டுக்கான விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்துடன் கைவிரல் அடையாளம் பதிவு செய்வதற்காக கோட்டாபய ராஜபக்ச குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு சென்றிருக்கவில்லை. அப்படி இருக்கையில் சில மணித்தியாலங்களுக்குள் புதிய தேசிய அடையாள அட்டை இலக்கத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடவுச்சீட்டு வினியோகிக்கப் பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அவ்வளவு சுலபமாக மாற்றியமைத்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு புதிய தேசிய அடையாள அட்டை இலக்கம் சமர்ப்பிக்கப்பட்டதால் கோட்டாபய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர் என்பதை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கணினி தரவுகளில் கண்டுபிடிக்க முடியவில்லை. நியாயமான அடிப்படையில் நோக்கும் போது கோட்டாபய ராஜபக்ச இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபர் ஒருவர் கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகளை முற்று முழுதாக மறைத்து செய்யப்பட்டுள்ளார்.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொடுப்பது குறித்த துறைக்குப் பொறுப்பான அமைச்சரின் முழு அதிகாரத்தின் கீழ் உள்ளது. அது கேள்வி எழுப்ப முடியாத அதிகாரமாகும்.

பிரஜைகள் சட்டத்தின் 19 ஆவது சரத்தின் அடிப்படையில் பிரதமர் கோரிக்கையின் அடிப்படையில் அனைத்து காரணங்களுக்காகவும் இலங்கைக்கு சிறந்தது என்ற முடிவு எடுக்கப்படுமாயின் பிரஜை ஒருவருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க முடியும். அத்துடன் 'இலங்கைக்கு பாதகமாக அமையும்' என்றால் இரட்டை பிரஜா உரிமையை ரத்து செய்வதற்கும் பிரதமருக்கு அதிகாரம் உள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை கொண்ட நபருக்கு சாதாரணமான இலங்கைப் பிரஜையாக மாறவேண்டுமானால் குறித்த நபர் பிரஜைகள் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் ஒன்றை முன்வைக்க வேண்டும். அதனை ஈடு செய்து கொடுப்பதும் பிரதமருக்கு உள்ள அதிகாரமாகும்.

இரட்டை குடியுரிமை கொண்ட நபராக அல்லாமல் மஹிந்தவின் ஜனாதிபதி தேர்தலில் கள்ளத்தனமாக வாக்களித்தார் 

உயர் நீதிமன்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட உறுதிமொழி கடிதத்தின் அடிப்படையில் அவர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பியது தனது சகோதரரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவாகும். அதன் போது அவர் அமெரிக்க பிரஜையாக இருந்த நிலையில் அவருக்கு இலங்கை குடியுரிமை இருக்கவில்லை. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல்படி கோட்டாபய ராஜபக்ச 2005ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தது அமெரிக்க குடியுரிமை கொண்ட நபராக என்பதோடு சுற்றுலா விசாவிலையே அவர் இலங்கை வந்துள்ளார். தனது சகோதரரான மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச இரட்டை குடியுரிமைகான விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.

அது அப்படி இருந்தபோதும் 2005 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பின் அடிப்படையில் அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்ச வாக்காளர் பட்டியலில் பதியப்பட்டு இருந்தார். அவர் மெதமுலன வீரகெட்டிய இலக்கம் 114 என்ற 130 ஆம் இலக்க வாக்காளர் தரத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தார். அதே முகவரியில் ராஜபக்ச பர்சி மகேந்திர மற்றும் அவரது மனைவியான ராஜபக்ச சிராந்தி மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை கொண்ட மனைவி ராஜபக்ச லோமா மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

புதுமை ஆனாலும் உண்மை திருட்டுத்தனமாக வாக்காளர் இடாப்பில் பெயர் இணைத்துக்கொள்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.

புதுமையான விடயம் என்னவென்றால் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான எவ்வித ஆவணங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தேடிப் பிடித்துக் கொள்ள முடியவில்லை இருக்கும் ஒரே ஒரு ஆவணம் கோட்டாபய ராஜபக்ச 2005ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி இரட்டை குடியுரிமை பெறுவதற்காக சமர்ப்பித்த விண்ணப்பம் மாத்திரமே ஆகும்.

குறித்து கோரிக்கை நவம்பர் 21 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளது ஆனால் அப்போது அமைச்சர்கள் எவரும் நியமிக்கப்பட்டு இருக்கவில்லை அந்த காலத்தில் பல இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள் இருந்தபோதும் கோட்டாபய ராஜபக்சவின் விண்ணப்பம் மேலே எடுக்கப்பட்டுள்ளது அமைச்சர் ஒருவரும் இல்லாமல் இரட்டை குடியுரிமை காண அனுமதி வழங்கப்பட்டது எவ்வாறு?

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு 2005 நவம்பர் 21 ஆம் திகதி இரட்டைக்குடியுரிமை வழங்கப்பட்டிருந்த போதும் அது தொடர்பான ஆவணங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி தரவுகளில் சேர்க்கப்பட்டது 2014ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி ஆகும். இவ்வாறான நிலையில் உண்மையான தகவல்களை தேடி ஆராய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இருந்திருக்கலாம்.

இருந்தபோதும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இரட்டை குடியுரிமை பெற்றுக்கொடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட விண்ணப்பப்படிவம், பணம் செலுத்தப்பட்ட ஆவணம், முன்வைக்கப்பட வேண்டிய இரட்டை குடியுரிமை சான்றிதழ் என்பவற்றை கண்டுபிடிக்க முடியவில்லை. அது இந்த நாட்டில் இருந்த பாதுகாப்பு செயலாளரின் தனிப்பட்ட கோப்புகளில் சென்றுள்ளது. கோட்டாபய ராஜபக்ச எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இரட்டை குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிப்பதாக பதிவாகவில்லை.

இந்த தகவல்கள் இல்லாமல் போனமை அல்லது காணாமல் போனமை குறித்து அதிகாரிகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் அறிக்கை முறைப்பாடு செய்து இருக்கவில்லை.