நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் - கோத்தாக்கு தேரர் அறிவுரை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, August 13, 2019

நாட்டுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் - கோத்தாக்கு தேரர் அறிவுரை


ஜனாதிபதி தேர்தலில்  பாேட்டியிடும் கோட்டடாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட நலன்களை கவனத்திற் கொள்ளாமல் தாய் நாட்டை பாதுகாக்க முதலிடம் வழங்க வேண்டும் என பல்லேகம ஹெமரதன தேரர் தெரிவித்துள்ளார். 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு ஆசி வேண்டி ருவான்வெலிசாய விகாரையில் நேற்று விசேட சமய வழிபாடுகள் இடம்பெற்றன. 

இந்த நிகழ்வில் பங்கேற்று ஆசி வழங்கிய போதே பல்லேகம ஹெமரதன தேரர் இதனை தெரிவித்துள்ளார்.