வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவரை,மீண்டும் ஒக்டோபர் 4ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 30, 2019

வியாழேந்திரன் உள்ளிட்ட ஐவரை,மீண்டும் ஒக்டோபர் 4ம் திகதி நீதி மன்றத்தில் ஆஜராக உத்தரவு!


மட்டக்களப்பு நகரில், கடந்த செவ்வாய்க்கிழம,  நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமானது, பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைத்தது என்ற காரணத்தினால், இன்றைய தினம் (30)  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிப்புரை விடுக்கபட்டிருந்தது.

இதற்கமைய, வியாழேந்திரன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் செல்வி மனோகரன் உட்பட ஐவர் இன்று (30) ஆஜரான போது, மீண்டும் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஆஜராகுமாறும், மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் வழங்குமாறும்  உத்தரவிடப்பட்டுள்ளது.

சீயோன் தேவாலய தாக்குதிலில் பலியான தற்கொலைக் குண்டுதாரியின் உடலை,  நீதிமன்ற உத்தரவின்பேரில் மட்டக்களப்பு கள்ளியன்காடு மயானத்தில் புதைத்தமையைமைக் கணடித்து,  இவர்கள் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.