இராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல்! 32 படையினர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, August 2, 2019

இராணுவ அணிவகுப்பு மீது தாக்குதல்! 32 படையினர் பலி!மத்திய கிழக்கு நாடான யேமனின் துறைமுக நகரமான அடென் பகுதியில் இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 42 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நகரத்தில் உள்ள பிறிக்ஹா (Breiqa) நகரில் உள்ள அல்-கலா முகாமில் இராணுவ அணிவகுப்பு ஒன்றின் மீது  ஹவுத்தி போராளிகள் நடத்திய தாக்குதலேயே குறைந்தது 32 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேநேரம் நகரின் காவல் நிலையம் ஒன்றில் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.

இன்றைய தாக்குதல்களில் 56 பேர் காயமடைந்துள்ளனர்.

புதிய தாக்குதலுக்குத் தயார்ப்படுத்தலில் ஈடுபட்ட படையினரின் அணிவகுப்பு மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என போராளிகள் தரப்பினர் கூறியுள்ளனர்.

அப்படியில்லை, புதிதாக இணைக்கப்பட்ட படையினரின் மதிப்பளிக்கும் அணிவகுப்பு மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என அரச படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.