மியன்மாரில் இருந்து ஆயிரக்கணக்கான ரோஹினிய அகதிகள்,பங்களாதேஷில் ஞாயிறன்று தங்கள் குடிபெயர்ந்ததின் இரண்டாம் ஆண்டு நிறைவை ஒட்டி, அவர்கள் தங்கள் குடியுரிமையையும் மற்ற உரிமைகளையும் மியான்மர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று அழுது கொண்டும், பிரார்த்தனைசெய்தனர்.
200,000 வரையான ரோஹினிய அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக இருப்பதாக சர்வதேச செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
அகதிகளை திருப்பி அனுப்ப ஐநா உதவி செய்ய தயாராக இருக்கின்றபோதும் தங்கள் பாதுகாப்பிற்கு அஞ்சி, மியன்மாரில் நம்பிக்கை இல்லாத நிலையில், திரும்பிச் செல்ல ஒருவரும் ஒப்புக் கொள்ளவில்லைeஎன்பது குறிப்பிடத்தக்கது.