போதைப்பொருள் குற்றவாளி மொஹமட் ஷியாம் மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 2003 ல் கொழும்பின் வோர்ட் பிளேஸில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருளுடன் சந்தேக நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 23 கிலோகிராம் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் 2007 ல் மரண தண்டனை விதித்தது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை ஷியாம் தம்பதி தாக்கல் செய்திருந்தனர்.
இருப்பினும், இந்த சந்தேக நபர்களுக்கு மரண தண்டனை விதித்த உயர் நீதிமன்றத்தின் முடிவை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது