கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்ட ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அவரின் விபரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.