முகாமில் தூக்கில் தொங்கிய இராணுவகோப்ரல் - கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்! - Kathiravan - கதிரவன்

Breaking

Saturday, July 27, 2019

முகாமில் தூக்கில் தொங்கிய இராணுவகோப்ரல் - கொலையா? தற்கொலையா? விசாரணை தீவிரம்!


இராணுவ முகாமில் ஒன்றில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம - காவன்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே வீரரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட இராணுவ கோப்ரல், தனது இராணுவ சேவையில் இருந்து இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெற இருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் ,சம்பவம் குறித்து திஸ்ஸமஹாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.