நோயுற்ற பிள்ளையை அழைத்துச் செல்ல பாடசாலை வந்த தந்தை சுட்டுக் கொலை - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 5, 2019

நோயுற்ற பிள்ளையை அழைத்துச் செல்ல பாடசாலை வந்த தந்தை சுட்டுக் கொலை

காலி ,அக்மீமன பாடசாலை ஒன்றிற்குள் பிரவேசிக்க முயன்ற ஒருவர் 


துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்த பின்னர் அந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டமை அறிந்ததே.

இது தொடர்பில் பொலிஸார் நடத்திய விசாரணையின்போது ,பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரின் தந்தையே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர் சுகயீனமுற்றிருப்பதாக பாடசாலையில் இருந்து சென்ற தொலைபேசி அழைப்பு ஒன்றையடுத்து மேற்படி தந்தை பாடசாலைக்கு வந்துள்ளார்.அவர் உட்பிரவேசிக்க முற்பட்டபோது படைச்சிப்பாய் அவருடன் தர்க்கம் புரிந்து பின்னர் உட்பிரவேசிக்க அனுமதி மறுத்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிப்பாயிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.