வைகோவுக்கு ஓராண்டு சிறை! பேரதிர்ச்சியில் பலர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, July 5, 2019

வைகோவுக்கு ஓராண்டு சிறை! பேரதிர்ச்சியில் பலர்


வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

வைகோ மீதான தேச துரோக வழக்கில் குற்றவாளி என அறிவித்த சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

வைகோ மீது கருணாநிதி அரசு அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்- தி.மு.க.வுக்கு எதிராகவும் அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூல் வெளியீட்டு விழா 2009-ம் ஆண்டு எழும்பூர் ராணி சீதை அரங்கில் நடைபெற்றது.

இதில் வைகோ பங்கேற்று ஆவேசமாக பேசினார்.

அவரது பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக கூறி தேசதுரோக வழக்கு தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்டது.

வெகு நாட்களாக நடைபெற்ற இந்த வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வைகோ முறையிட்டார். ஆனால் வழக்கை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியாது என்று ஐகோர்ட்டு அறிவித்து விட்டது. அதன்பிறகு இந்த வழக்கு சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி அறிவித்தார். அதன்படி அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.