ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 23, 2019

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ?

கோத்தாவிற்கு எதிரான பலமான தரப்பு ஒன்றே ஜனாதிபதி தேர்தலில் தேவையென்ற கருத்தின் அடிப்படையில் சஜித் பிறேமதாசாவை ரணில் ஏற்றுக்கொண்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி இதனை உறுதி செய்து தகவல் எதனையும் வெளியிடவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நேற்று மாலை அலரி மாளிகையில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் கரு ஜயசூரியவுக்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்னொரு பிரிவினரும் கருத்து வெளியிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கடும் வாக்குவாதங்களின் பின்னர் எந்த முடிவுகளுமின்றி நேற்று மாலை கூட்டம் முடிவடைந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி தீர்மானிக்கும் வரை யாரும் இதைப் பற்றிப் பொதுவெளியில் பேசக்கூடாது எனக் கட்சியின் தலைவர் ரணில் இங்கு குறிப்பிட்டார் எனச் சொல்லப்படுகின்றது.என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நேற்றிரவு தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது