ஆவா குழுவும் ஆளுனரும் ஒரே நிகழ்ச்சி நிரலில்- கண்ணதாசன் காசிநாதர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, July 23, 2019

ஆவா குழுவும் ஆளுனரும் ஒரே நிகழ்ச்சி நிரலில்- கண்ணதாசன் காசிநாதர்

யாழ்ப்பாணத்தில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும் மக்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாழவேண்டும் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என "உண்மையாகவே" விரும்புகிற பலர் "ஆவா" கோஷ்டி எனச் சொல்லப்படும் அந்த இளைஞர் மீது பொலிசார் என்கவுண்டர் நடாத்திக் கொன்றதை சரி என விவாதிப்பது மிகவும் கவலையாகவும் பயமாகவும் உள்ளது.

உண்மையில் யாழ்ப்பாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நினைத்தால் பொலிசாரால் இந்த ஆவாக் காரரை கோழியை அமுக்குவது போல் ஒரே நாளில் வழிச்சுத் துடைச்சு விடலாம்.

ஆவாப் பெடியளின் முகநூல் போஸ்ட்டுகளைப் பார்த்தால் தெரியும், அவர்களில் பாதிப் பேர் "நல்லொழுக்கப்" பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள். மீதிப் பேர் மனநல மருத்துவ மனையில் அடைத்து வைக்கப்பட் வேண்டியவர்கள்.

அவர்களைப் பிடித்து கேஸ் போட்டால் அடுத்த நாளே அவர்களை லோயர்மார் (சைக்கிள் கட்சிக்கார) வெளியில் கோண்டு வந்து விடுகிறார்கள் ஆதலால் அவர்களை இப்படிப் போட்டுத்தள்ளுவதுதான் சரி என 'யாழ்ப்பாணத்தில் சட்டமும் ஒழுங்கும் பேணப்பட வேண்டும் மக்கள் அமைதியாகவும் அச்சமின்றியும் வாழவேண்டும் பண்பாடும் கலாச்சாரமும் காப்பாற்றப்பட வேண்டும் என விரும்புகிற' ஒரு சகோதரர் எழுதுகிறார்.

ஐயகோ!

கதிர்காமர் வீட்டில் கதியால் வெட்டியவரை பயங்கர்வாதத் தடைச் சட்டத்தில் சாகும் வரை சிறையில் வைத்திருக்கவும், சில்லறைக் கடை வியாபாரம் செய்து கொண்டிருந்தவனை போதைவஸ்த்துத் தடுப்புச் சட்டத்தில் 30 வருசமாக சிறையில் வைத்துக் கடைசியாக தூக்குத் தண்டனையும் வழங்கவல்ல இறுக்கமான சட்டங்களைக் கொண்ட 'ஜனநாயக' நாட்டில் சமூகவிரோதிகளைத் தடுத்து வைக்கவா நீதிக்கு ஒரு நாதி இல்லை?

இது பகிடி அல்ல!

ஆவா அல்லது யாழ்ப்பாண வாள்வெட்டுக் கோஷ்டி சார்ந்து இலங்கைப் பொலிசாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் யாழ்ப்பாணத்தில் "பலமான நாசகார பாதாள உலக கோஷ்டி" ஒன்றை வளர்க்கும் நோக்குடனேயே நிறைவேற்றப்படுகின்றன.

பிடிப்பது விடுவது. பிடிப்பது விடுவது. பின்னர் ஆவா என்பது பெரிய இயக்கம் என்பது போல் ஊடகங்கள் ஊடாக ஆவாப் பெடியளை பப்பாவில் ஏத்துவது. அவர்களை சுதந்திரமாகத் திரிய விடுவது. பின்னர் ஆவாவைச் சொல்லி சனங்களை வெருட்டுவது. சனங்கள் வெருள வெருள ஆவாப் பெடியளுக்கு இன்னும் உசார் ஏறும். அட்டகாசம் கூடும்...

அப்பிடி அப்பிடியே ஒண்டும் இல்லாத ஆவாவை ப்ரபெஃஷனல் பாதாள உலகக் கோஷ்டி ஆக்குவது!

ஆவா கோஷ்டியின் அடிப்படை என்னவென்று ஆராய்ந்தால் அது "நட்பு".

நண்பர்களுக்காக உயிரையும் கொடுப்போம் என்பதுதான் அவர்களின் தத்துவம். அதைச் சரியாக புரிந்து வைத்துக் கொண்டே இந்த என்கவுண்டரும் நடந்துள்ளது.

அதாவது ஒருவனை கொன்றுவிட்டு மீதிப் பேரை விட்டு வைத்தால் நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்குவதற்கான ஒரு நாசகார கோஷ்டியாக மீதிப்பேர் வளர்வார்கள்!

அந்த நாசகாரக் கோஷ்டியை சாட்டாக வைத்து மீதி விடயங்களை (அரசியல்சார்) அரங்கேற்றுவதே நோக்கம்.

 உண்மையில் இது பொலிசின் திட்டம் அல்ல. நல்லாட்சியின் திட்டம்!

அண்மையில் கவர்னர் ஐயா ஆவாக் காரருக்கு அழைப்பு விட்டதும் அதற்கு ஆவா பதில் அறிக்கை விட்டதும் ஒரே நிகழ்ச்சி நிரலில், ஒரே ஸ்க்றிப்ற் இல் ஒரே ஆட்கள் நடித்த நாடகமே.

அதாவது, "ஆவாவை" பெரிதாக்கி, அதைப் பூதாகாரமாகி, எம்மை பு**** மக்களாக்கி எல்லாரையும் பூண்டோடு அழிக்கும் திட்டம்! 

-கண்ணதாசன் காசிநாதர்-