மட்டக்களப்பு மாவட்டத்தில் மறுபயிர் ஊக்குவிப்பு அடிப்படையில் நிலக்கடலை உற்பத்திச் செய்கைத் திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய மாவட்ட செயலக விவசாய திணைக்களத்தின் மேற்பார்வையில் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரை சுமார் 345 ஏக்கரில் நிலக்கடலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய ஜனாதிபதி செயலகம் அமுல்படுத்தும் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென சுமார் 48 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் ஊடாக, மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான மாணிக்கம் உதயகுமாரின் வேண்டுகோளுக்கு அமைய நிலக்கடலை உற்பத்திச் செய்கையில் ஈடுபடும் 700 விவசாயிகளுக்கு சுமார் 13 ஆயிரத்து 600 கிலோகிராம் விதை நிலக்கடலை அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.