இணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 17, 2019

இணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை!


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அத்திவரதரை குடும்பத்துடன் தரிசித்ததாக இணையத்தில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மை தன்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது..

காஞ்சிபுரத்தில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்து மக்களுக்கு அருள்பாலிக்கும் அத்திவரதர், இந்தாண்டு வெளியே வந்துள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை 48 நாட்கள், அத்திவரதரை தரிசிக்கும் பொருட்டு அத்திவரதர் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய பிரதமர் மோடி அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்திற்கு வருகை தர உள்ளார். இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த உட்பட இந்தியாவின் பல முக்கிய அரசியல் தலைவர்கள் அத்திவரதரின் தரிசனம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், குடும்பத்துடன் அத்திவரதரை தரிசித்தாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த புகைப்படம் போலியானது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ராமதேவன்பட்டியில் உள்ள முன்னாள் சபாநாயகர் காளிமுத்து நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்திய போது எடுத்த புகைப்படம் அது என தெரியவந்துள்ளது.