யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, July 11, 2019

யாழில் அழுகிய நிலையில் பெண்ணின் சடலம்!

யாழ்ப்பாணம் சுண்டுக்குழி காட்டு கந்தோர் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டிலிருந்து இன்று காலை துர்நாற்றம் வீசுவதை அவதானித்த அயலவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் சடலம் காணப்படுவதை அவதானித்துள்ளனர்


இதனையடுத்து, இந்த விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்துக்கு விரைந்த யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த வீட்டில் தனியாக வசித்துவரும் மாலதி (வயது 58) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.