யாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 21, 2019

யாழில் மதம் மாற்ற முயன்ற குழுவை விரட்டிய இளைஞர்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பொன்னாலை மற்றும் கல்விளான் கிராமங்களில் மதம் பரப்பும் நோக்கத்துடன் சுவிசேசக் கூட்டம் நடத்துவதற்கு முற்பட்ட கிறிஸ்தவ சபை ஒன்றின் உறுப்பினர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.

பொன்னாலையில், கிறிஸ்தவ மக்கள் எவரும் வசிக்காத இடத்தில், தனியார் காணி ஒன்றில் இசை நிகழ்வுடன் கூடிய கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வெளி இடத்தில் இருந்து பேருந்து ஒன்றிலும் மோட்டார் சைக்கிள்களிலுமாக நூற்றுக்கணக்கானோர் கொண்டுவரப்பட்டு இறக்கப்பட்டனர்.

இதை அவதானித்து அங்கு சென்ற அவ்வூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர், யார் அனுமதி வழங்கியது என அப்பகுதி மக்களைக் கேட்டபோது அவர்கள், தாங்களாகவே இவர்கள் வந்து இங்கு கூட்டம் நடத்துகின்றார்கள் என்றனர்.

எதற்காகக் கூட்டம் நடத்துகிறீர்கள் என வந்தவர்களிடம் கேட்டபோது, நோய், பிணிகளில் இருந்து மக்களை விடுவிப்பதற்கான நிகழ்வு எனப் பதிலளித்தனர்.

அப்படியாயின் வைத்தியசாலைகளை மூடிவிட்டு நீங்களே ஜெபியுங்கள் என ஆத்திரத்துடன் கூறிய அவ் இளைஞர்கள் உடனடியாக இந்த இடத்தில் இருந்து வெளியேறுங்கள் என அவர்களை எச்சரித்தனர்.

பொன்னாலை பூர்வீகமாக சைவப் பூமி. இங்கு மதம் பரப்பும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் விளைவுகள் விபரீதமாக முடியும் என ஊரவர்களுடன் இணைந்து அவர்களைக் கடுமையாக எச்சரித்தனர்.

உடனடியாக இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் எனக் கூறி பலவந்தமாக அவர்களை வெளியேற்றினர்.

குறித்த கூட்டத்தினருக்கு தலைமை தாங்கி வந்த பாதிரியார், காலையில் தூக்கத்தால் எழும்பும்போது ‘இயேசுவே எனக் கூறியவாறு எழும்புங்கள்’ என தங்களை அறிவுறுத்தினார் என அங்கிருந்த சிறுவர்கள் தெரிவித்தனர்.

பொன்னாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட குறித்த அல்லேலூயாக் கும்பல் அடுத்த கிராமமான கல்விளானில் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த சனசமூக நிலையத்தின் பிரதிநிதிகள் அங்கு சென்று அவர்களைப் பலவந்தமாக வெளியேற்றினர்.