குழந்தைகள் இருவர் உட்பட மூவர் மீது அசிட் தாக்கிவிட்டு நபர் ஒருவர் தற்கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 7, 2019

குழந்தைகள் இருவர் உட்பட மூவர் மீது அசிட் தாக்கிவிட்டு நபர் ஒருவர் தற்கொலை!


கேகாலை கொடபொல பகுதியில் பெண் ஒருவர், பெண் குழந்தை ஒன்று மற்றும் ஆண் குழந்தை ஒன்றின் மீது அசிட் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நபர் ஒருவர் அசிட்டை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்தில் காயமடைந்த பெண் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கனங்கபுர, கொட்டியாகும்புர பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த நபரிற்கும் தாக்குதலுக்கு உள்ளான பெண்ணிற்கும் இடையில் கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சம்பவத்திற்கு முன்னதாக உயிரிழந்த நபர் குறித்த பெண் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக பயன்படுத்திய கல்கடஸ் வகையான துப்பாக்கியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.