திருகோணமலை, நிலாவெளி கடற்கரை பகுதியில் நேற்றிரவு குறித்த நபர் தனது மனைவியுடன் நடமாடிக் கொண்டிருந்த வேளை அவருக்கு மார்புப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அவுஸ்திரேலியா - தஸ்மினியா நகரைச் சேர்ந்த 67 வயதுடைய ரொடோல் யோன் லெஸ்மன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனையின் பின் மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அவுஸ்திரேலியா நாட்டுக்கு சடலத்தை கொண்டு செல்ல தூதரகத்தின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், திடீர் மரணம் தொடர்பில் தூதரகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் உயிரிழந்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.