வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, July 24, 2019

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு!குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிரான வழக்கு குருணாகல் வைத்தியசாலையில் இன்று (25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, மக்கள் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவார்கள் என்பதினால் வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பயங்கரவாத அமைப்புக்களின் முன்னேற்றத்துக்கு நிதி உதவி செய்துள்ளதாக வைத்தியர் ஷாபி மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லை என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் துசித முதலிகே நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.