பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது உண்மையான முகத்தினையும், குணத்தினையும் காட்டி வருகிறார் என்று ஒட்டுமொத்த மக்களும் நம்பிக்கை வைத்திருந்த லொஸ்லியாவைப் பற்றி சமூகவலைத்தளங்களில் உலாவரும் தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் தான் இருக்கும் இடத்தினை மகிழ்ச்சியாகவே வைத்துக்கொள்வார். அவ்வளவு எளிதில் யார் மீதும் காதல் வயப்படமாட்டார், கோபம் கொள்ளமாட்டார், அவருக்கு காதலர் என்று எவரும் இல்லை என்று சமீபத்தில் லொஸ்லியாவின் தோழி கூறியது அனைவரும் அறிந்ததே...
அதுமட்டுமல்லாம் அவர் கடந்த வந்த பாதைகளில் ஏற்பட்ட வலிகளை விவரித்த போது ஒட்டுமொத்த மக்களின் இதயத்திற்குள் குடிகொண்டார்.
தற்போது ட்விட்டர் பக்கத்தில் லொஸ்லியாவுடன் தான் பள்ளியில் படித்தவர் என்றும், அவர் மிகவும் மோசமானவர்... இனிமேல் தான் அவரது சுயரூபம் அனைவருக்கும் தெரியும் என்றும் நபர் ஒருவர் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அவருக்கு திருமணம் நடந்துவிட்டதாகவும், தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் குறித்த நபர் கூறியுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாத நிலையில் ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.