முல்லைத்தீவில் மனைவியின் இரு தங்கைகளிற்கும் கணவன் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, July 14, 2019

முல்லைத்தீவில் மனைவியின் இரு தங்கைகளிற்கும் கணவன் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்!முல்லைத்தீவுப்பகுதியில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித் தேடிவருகின்றாரனர் பொலிசார்

18 வயது மற்றும் 20 வயதான இரு யுவதிகளே கணவரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின் சொந்தக்காரனான 32 வயதான 2 பிள்ளைகளின் குடும்பஸ்தரே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளார்


காதலித்து திருமணம் புரிந்த குறித்த குடும்பஸ்தர் காதலிக்கும் போது தனது உறவினர்களை பெற்றோரை புறக்கணித்தே மனைவியைத் திருமணம் செய்துள்ளார்.

அதன் பின்னர் தனது மனைவியின் தாய் மற்றும் மனைவியின் இரு சகோதரிகளையும் சகோதரரையும் தனது பொறுப்பில் வைத்திருந்தே கவனித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென சுகவீனமடைந்த மனைவியின் சகோதரி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் கர்ப்பமான தகவல் வைத்தியாசலை வட்டாரங்களால் மாமியாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பின்னர் நடந்த விசாரணையின் போது கர்ப்பத்திற்கு காரணம் தனது மருமகன் என அறிந்த மாமியர் தனது மருமகனைக் காப்பாற்றும் பொருட்டு தனது திருமணமாகாத மகள்கள் இருவருடனும் மருமகன் வீட்டிலிருந்து வெளியேறி சற்றுத் தொலைவில் வசித்து வந்துள்ளார்


இதன் பின்னர் தனது இளைய மகளும் வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போத அவளும் கர்ப்பம் என வைத்தியர்கள் தெரிவித்ததால் பெரும் அதிர்ச்சியடைந்து அது தொடர்பாக விசாரித்த போது அதற்கும் மருமகனே காரணம் என தெரியவந்துள்ளது.

இதனால் கடும் விசனமடைந்த மாமியார் இது தொடர்பாக தனது திருமணமான மூத்த மகளுக்கு முறையிட்டதுடன் அவருடனேயே சென்று பொலிசாரிடமும் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.

இதனையடுத்து மருமகன் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் அவரைத் தேடிவருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.