கல்லூரியில் படித்து வரும் மாணவியே சத்தியப்பிரியா.
அப்பகுதியிலேயே பிரிதொரு கல்லூரியில் கற்கும் மாணவனின் பெயர் லோறன்ஸ்.
குறித்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் முகப்புத்தகத்தில் நட்பு கிடைத்துள்ளதுடன் பின்னர் நட்பு காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில் நீண்டகாலம் இருவரும் காதலித்து வந்துள்ளதோடு லோறன்ஸ் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கெல்லாம் சத்தியப்பிரியா இணங்கி வந்துள்ளார்.
சில வருடங்கள் இவ்வாறு கடந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளவதற்கு முன்னதாகவே கணவன் மனைவியாக வாழ்ந்துள்ளனர்.
பின்னர் லோறனஸ் சத்தியப்பிரியாவை விட்டு விலகி பிரிதொரு யுவதியிடம் தொடர்பினை பேணி வந்துள்ளார்.
சத்தியப்பிரியாவிடம் கதைப்பதனையும் பழகுவதனையும் குறைத்துக்கொண்ட லோறன்ஸ் விலகிச் செல்வதற்கு முயற்சித்துள்ளார்.
இதனை அறிந்த காயத்திரி தனது தந்தையிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.
பொறுமையாக கேட்டுக்கொண்ட தந்தை லோறன்ஸ் என்பவரை தனது மகளான சத்தியாபிரியாவிற்கு தெரியாமல் சந்திக்க சென்றுள்ளார்.
லோறன்ஸ் என்பவரை அருகிலுள்ள நகரில் சந்தித்து தனது மகளின் விவகாரம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
ஆனால் சத்தியபிரியாவின் தந்தையின் கோரிக்கையினை பொருட்படுத்தாத லோறன்ஸ் தொடர்ச்சியாக வாய்தர்க்கம் செய்துள்ளதோடு, சத்தியப்பிரியாவை தரக்குறைவாக இழிவான வார்த்தைகளால் நிந்தித்துள்ளார்.
நீண்ட நேரம் பொறுமை காத்த சத்தியப்பிரியாவின் தந்தை திடீரென தனது அங்கத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து லோறன்ஸ் என்பவரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
சம்பவ இடத்தில் நின்றவர்கள் அனைவரும் விலகிக்கொண்டதன் பின்னர் அவர் மேலும் லோறன்ஸ் என்பவரை அரிவாளால் வெட்டிய போது சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர்.
இதன்போது சத்தியப்பிரியாவின் தந்தை தனது அரிவாளை அனைவர் முன்னிலையிலும் காண்பித்தப்படி பெண்களை ஏமாற்ற நினைக்கும் அனைவருக்கும் இதுபோன்று தண்டனையளிக்குமாறு கேட்டுக்கொண்டு பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
சத்தியப்பிரியாவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதோடு படுகாயமடைந்த லோறன்ஸ் அவசர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சென்னை அம்பத்தூர் நகரில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.