பேருந்து மீது குண்டுத்தாக்குதல்! குழந்தைகள் உட்பட 34பேர் பலி! - Kathiravan - கதிரவன்

Breaking

Wednesday, July 31, 2019

பேருந்து மீது குண்டுத்தாக்குதல்! குழந்தைகள் உட்பட 34பேர் பலி!

ஆப்கானிஸ்தானின் பரஹ் மாகாணத்தில் வீதி ஓரமாக இருந்த குண்டு ஒன்றின்மீது பேருந்து மோதியதால் குண்டு வெடித்து  குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 34 பயணிகள் உயிரிழந்ததாகவும், 17 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் 15 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும்,எனவே  இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று  ஃபர்கா மாகாண காவல் தலைமை அதிகாரி மொஹிபுல்லா மோஹிப் கூறியுள்ளார்.