தேசிய தெவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கியஸ்தா் அஹமத் மிலான் வழிகாட்டலில் நாட்டில் பாாிய தற்கொலை தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிடப்பட்டமை அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல இடங்களில் தாக்குதல் மேற்கொள்வதற்கு 11 தற்கொலைதாரிகள் தயார் நிலையில் இருந்ததாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதலுக்காக கல்முனை சியாம் மற்றும் மொஹமட் நிஸான் என்பவர்கள் உதவியுள்ளதாகவும் குறிப்பிடபட்டுள்ளது.
அதோடு இதற்காக அவர்கள் கிழக்கு மாகாணத்தில் 5 வீடுகளை வாடகைக்கு பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய நீர்கொழும்பில் வீடு ஒன்றில் இருந்து லொரி ஒன்று வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு
சம்மாந்துறைக்கு சென்றுள்ளதாக சம்பந்தப்பட்ட சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெருந்தொகை இரசாயன திரவங்கள் அடங்கிய பெரல்கள் லொரியில் ஏற்றப்பட்டதாக அதன் சாரதி விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து தேசிய தவ்ஹித் ஜமாத் பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.