நேற்று வியாழக்கிழமை வட ஆபிரிக்கா நாடான லிபியாவின் அல் கோம்ஸ் நகரிலிருந்து இரு படகுகள் மூலம் ஐரோப்பா நோக்கிப் பயணித்துள்ளனர் 300 ஏதிலிகள்.
லிபியாவிலிருந்து 70 கடல் மைல் தொலைவில் மத்திய தரைகடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது படகுகள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகின.
தண்ணீரில் மூழ்கித் தத்தளித்துகொண்டிருந்த மக்களை அவதானித்த மீன்பிடிப்படகு ஒன்று தகவலை லிபிய கடலோரக் காவல் படையினருக்கு வழங்கினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த லிபிய நாட்டு கடலோரக் காவல்படையினர் கடலில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த 137 பேரை உயிருடன் மீட்டு லிபியாவின் தலைவர் திரிப்போலிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் 150 பேருக்க மேல் காணாமல் போயுள்ளனர். தண்ணீரிருள் மூழ்கிய அகதிகளைத் தேடும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்ட போதும் ஒருவரது சடலமே மீட்கப்பட்டுள்ளது