யாழில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வில் கடும் சோதனை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 2, 2019

யாழில் பிரதமர் பங்கேற்கும் நிகழ்வில் கடும் சோதனை!

யாழ்ப்பாணத்தில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 4500 சமுர்த்தி பயனாளிகளுக்கு இணைப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு யாழ். முற்றவெளியில் இடம்பெற்று வருகிறது.

இதன்காரணமாக இந்த நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற மக்கள் யாழ். முற்றவெளிக்கு வெளியில் தீவிர சோதனைகளின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பொதிகள் கைபைகள் போன்றவை கொண்டுசெல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ள பிரதமர் ரணில், சமுர்த்தி பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வைக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.

பிரதமரின் யாழ். விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கடும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.