RSS இன் மூன்றாவது வருட பயிற்சி நிறைவு விழா நாகபுரியில் நாக்பூரில் இன்று நடைபெற்றது
பரம பூஜனிய சர்ச்சங்க சாலக் ஸ்ரீ மோகன் பாகவத் சிறப்புரை இருந்தது. முகாமில் கலந்து கொண்ட ஸ்வயம் சேவகர்கள் முகாமில் தாங்கள் கற்று கொண்ட பாடத்தை செய்து காண்பித்தனர்.பாரதம் முழுக்க பல்வேறு சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு அழைப்பாளராக புதிய தமிழகம் கட்சி தலைவர்
மருத்துவர் கிருஷ்ணசாமிஅவர்களும், இளைஞரணி தலைவரும் கிருஷ்ணசாமி மகனுமான மருத்துவர்.க.கி ஷியாம் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் குடியரசுத்தலைவர், பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர் ஆகிய பதவிகளை அனுபவித்த வங்காள ( ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு துணையாக இருந்தவர்) பிரணாப் முகர்ஜி தனது மகளது எதிர்ப்பையும் மீறி, ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராகச்சென்றார். டெல்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.சிறப்பு முகாமில், ராகுல் காந்தி, சீதாராம் யச்சூரி இருவரையும் அழைக்கிறார்கள் என செய்தி கசிந்த்து. ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். அதற்குப்பிறகுதான் ராகுல் காந்தி, தன்னை பூணூல் போட்ட பார்ப்பனர் என்றும், காஷ்மீர் பண்டிட் எனவும் கூறத் தொடங்கினார். இரண்டு ஆண்டு முன்பு, ஆர்.எஸ்.எஸ்.கார்ர்களுடன், நவீன் பட்நாயக், சீதாராம் யச்சுரி, பிரணப் முகர்ஜி விருந்துண்டு பேசிய படம் வெளிவந்த்து. இந்த முறை அந்தப் பட்டியலில், கிருஷ்ணசாமி போயுள்ளார் எனத் தமிழக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.