நாவாந்துறை சர்ச்சைக் காணியில் மாதா சொருபம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

நாவாந்துறை சர்ச்சைக் காணியில் மாதா சொருபம்!



யாழ்ப்பாணம் நாவாந்துறை – பொம்மைவெளியில் முஸ்லிம் பிரதிநிதியால் உரிமை கோரப்படும் காணியில் மாதா சொரூபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நாவாந்துறை – பொம்மைவெளியில் உள்ள அரச காணியை முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அபகரித்து வைத்துள்ளார் என்றும் அதனை தமக்கு பகிர்ந்து வழங்குமாறும் தமிழ் மக்கள் வலியுறுத்தினர். அத்துடன், அந்தக் காணிக்குள் நுழைந்து எல்லைக்கு கயிறு கட்டி தமக்குள் பகிர்ந்து கொண்டனர்.

எனினும் முஸ்லிம் பிரதிநிதி சார்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அங்கு வந்த சிறப்பு அதிரடிப் படையினரும் இராணுவத்தினரும் அப்பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றினர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை அந்தக் காணிக்குள் மாதா சொரூபம் ஒன்று பீடம் அமைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாவாந்துறைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.