சஹரான் ஹாசீமுடன் தேனீா் அருந்தியவா்கள் கவனமாக இருங்கள் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, June 23, 2019

சஹரான் ஹாசீமுடன் தேனீா் அருந்தியவா்கள் கவனமாக இருங்கள்



உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் சூத்திரதாாி சஹரான் ஹாசீமுடன் தேனீா் அருந்தியவா்கள் கவனமாக இருங்கள். என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தொிவித்துள்ளாா்.

காலி ஹினிதும பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

தாக்குதல் நடந்து 24 மணி நேரத்திற்குள் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

தாக்குதலை தடுக்க முடிந்திருக்கும் என்ற போதிலும் எந்த காரணத்திற்காக அதனை தடுக்க முடியாமல் போனது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சஹ்ரானுடன் தேனீர் அருந்தியவர்கள் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கின்றேன். அடிப்படைவாதத்தை பரப்ப எந்த குழுக்களுக்கும் இடமளிக்க போவதில்லை.

இப்படியானவர்கள் பற்றி தகவல் வெளியிடவும் நடக்கும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதும் மக்களின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.