பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

பொது மேடையில் விஜய்யை கிண்டல் செய்த ஜோதிகா? வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார். அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இவருடைய நடிப்பில் ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வரும் படம் ராட்சசி தமிழகத்தின் அரசுப்பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு படமாக இப்படம் உருவாகி உள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ஜோதிகா நிறைய கருத்துக்கள் சொன்னதை மனதில் கொண்டு பலரும் இப்படத்தை சாட்டை படத்துடன் ஒப்பிட்டார்கள்.

இதற்கு அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா பதிலளித்துள்ளார் இது குறித்து பேசிய அவர், “ஒரு ஹீரோ மூனு ஹீரோயின்களை காதல் செய்வது போல் படங்கள் தொடர்ந்து வரலாம். ஆனால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரக்கூடாதா?” என கேள்வில் எழுப்பியுள்ளார்.

ஜோதிகா இப்படி சொன்னது மெர்சல் படத்தைதான் என நினைத்துகொண்டு சில விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் அவரை வசைப்பாடி வருகிறார்கள்.