தேசிய தௌஹீத் ஜமாத் அடிப்படைவாத அமைப்பு மற்றும் அதன் உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில், மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, பதில் காவல் துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் தொடர் தற்கொலை தககுதல்களைத் தொடர்ந்து கடந்த மே 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட 21 23/2, 21 23/3 ஆகிய இரு அதி விஷேட வர்த்தமனிகள் ஊடாக தடைச் செய்யப்பட்ட ஜமாத்தே மில்லத்துல் இப்ராஹீம்,விலாயத் அல் செய்லானி ஆகிய அடிப்படை வாத அமைப்புக்கள் தொடர்பிலும் உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் பணித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்துள்ள விஷேட ஆலோசனை கடிதங்கள் இரண்டு ஊடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.