இலங்கை அரசின் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் பதவிகளை ஏற்பது தொடர்பான இன்றைய கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஒன்றுகூடி இது தொடர்பில் கலந்தலோசித்த போதிலும் இறுதியான ஒரு முடிவு எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
மீள அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜக்கிய தேசிய கட்சி முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்வம் காட்டிய போதும் றிசாத்பதியூதீன் தரப்பு அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதாக தெரியவருகின்றது.
இதன் தொடர்ச்சியாக இருதரப்பும் பரஸ்பரம் தர்க்கப்பட்டதுடன் கடந்த கால அரசியல் தொடர்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பதவிகளை இராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது