மர ஆலைகள் தடைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 11, 2019

மர ஆலைகள் தடைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்!

மர ஆலைகளை தடை செய்வதற்கு எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நேற்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

தொடர்ந்து சில நாட்களாக நடத்திவந்த சத்தியாக்கிரக போராட்டத்தின் பின்னரே சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 

இந்தப் போராட்டத்தில் மத குருமார்களும் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.