தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் செய்த பெரும் தவறு - ஞானசார தேரர் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 6, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் செய்த பெரும் தவறு - ஞானசார தேரர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை - ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.”

இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இன்று எங்களை இனவாதிகள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், நாம் அப்படியானவர்கள் அல்லர். இந்த நாட்டை மீட்டெடுக்கவே களத்தில் இறங்கியுள்ளோம்.

இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து விரைவில் நாட்டை மீட்டெடுப்போம். இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும். அந்த நிலையை நாம் விரைவில் ஏற்படுத்துவோம்.

ஆட்சி மாற்றம் வேண்டுமா? இல்லையா? என்பதை மக்களே தீர்மானிக்கட்டும். ஆனால், இஸ்லாமிய பயங்கரவாதிகளிடமிருந்து தேரர்களான நாம் இந்த நாட்டை மீட்டெடுப்போம். இது உறுதி" - என்றார்.