கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி படுகாயம்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, June 27, 2019

கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி படுகாயம்!



குடும்ப தகராறு காணரமாக கணவன் கத்தியால் குத்தியதில் மனைவி ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் குருநகர் சென்றொக் வாசிகசாலைக்கு அருகாமையில் இந்த வீபரீதம் இன்று (27) நண்பகல் இடம்பெற்றுள்ளது. 

சுமார் 45 வயது மதிக்கத்தக்க கணவன், 40 வயதுடைய மனைவியுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இன்று (27) தகராறு அதிகரித்ததன் காரணமாக மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார். 

மனைவி படுகாயமடைந்த நிலையில் அயலவர்களினால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில், கத்தி குத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்