இலங்கையில் கள்ளக்காதலை நேரில் கண்டதால் மாமியாரை கொன்ற மருமகள்! மகனும் சேர்ந்து நாடகம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 28, 2019

இலங்கையில் கள்ளக்காதலை நேரில் கண்டதால் மாமியாரை கொன்ற மருமகள்! மகனும் சேர்ந்து நாடகம்

சாரதியுடனான சல்லாபத்தை நேரில் கண்ட மாமியார்: மாமியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மருமகளும், கள்ளக்காதலனும்..!

பெண்ணொருவரின் தகாத உறவு, அவரின் மாமிக்கு தெரிய வந்­ததால் அவரைக் கொலை செய்து காத­ல­னுடன் இணைந்து தூக்கில் தொங்­க­ விட்ட மரு­க­ளையும், காத­ல­னையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­களை கம்­பளை மாவட்ட நீதி­மன்ற நீதவான் ஸ்ரீ நித் விஜே­சே­கர முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தி­ய­போது எதிர்­வரும் 7 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்

ரஜ எல ஹெடம்ப கஸ்­ஹின்­னயைச் சேர்ந்த 72 வய­தான எட்லிங் பெர்­ணாந்து என்ற பெண்ணே மரு­களால் கொலை செய்­யப்­பட்­ட­வ­ராவர். குறுந்துவத்தை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பெல்­லப்­பிட்­டிய ஹெடம்ப கஸ்­ஹின்ன பிர­தே­சத்தில் இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த 22 ஆம் திகதி பொலிஸ் அவ­சரப் பிரி­விக்கு தொலை­பேசி அழைப்பை மேற்­கொண்ட பெண் ஒருவர் தனது மாமி சமை­ய­ல­றையில் தூக்­கிட்டுத் தற்­கொலை செய்து கொண்­ட­தாக கூறி­யுள்ளார். இத­னை­ய­டுத்து அங்கு விரைந்த குறுந்து வத்தை பொலிஸார் சட­லத்தை மீட்டு பிரேத பரி சோத­னை­க­ளுக்­காக நாவ­லப்­பிட்டி வைத்­திய சாலையில் ஒப்­ப­டைத்­தனர்.

அங்கு மேற்­கொள்­ளப்­பட்ட பரி­சோ­த­னையில் மர­ணத்தில் சந்­தேகம் நில­வி­ய­தை­ய­டுத்து கம்­பளை பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பொலிஸ் அத்­தி­யட்சகர் விக்கும் கினிகே வின் ஆலோ­ச­னைக்­க­மைய குறுந்­து­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சந்­திக்க ஸ்ரீகாந்த் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் சூலனி வீர­ரட்ண ஆகி­யோரின் வழிக்­காட்­டலில் சிறப்புப் பொலிஸ் குழு ஒன்று அமைக்­கப்­பட்டு மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­க­ளின்­போது உயி­ரி­ழந்த பெண்ணின் மரு­மகள் மீது சந்­தேகம் ஏற்­பட்டு அவரை கைது செய்து மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர விசா­ர­ணை­யை­ய­டுத்து தனது மாமியை தானே கொலை செய்­த­தாக சந்­தேக நபர் ஒப்­புக்­கொண்­டுள்ளார்மேற்­படி பெண்ணின் கணவர் கொழும்பில் வேலை செய்து வந்த நிலையில் கண­வரின் தாய் மற்றும் தனது மூன்று பிள்­ளை­க­ளை­க­ளு­டனும் மேற்­கு­றிப்­பிட்ட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தனது வீட்டில் வசித்து வந்த 23 வய­து­டைய குறித்த பெண் தினமும் தனது பிள்­ளை­களை பாட­சா­லைக்கு அழைத்துச் செல்லும் சந்­தர்ப்­பங்­களில் குறித்த வேன் சார­தி­யுடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி அது காத­லாக மாறி­யுள்­ளது.

இதன் போது கடந்த மூன்று மாத கால­மாக சந்­தேக நப­ரான பெண், பிள்­ளை­களை பாட­சா­லையில் விட்ட பின்னர் காத­ல­னுடன் தனது வீட்டு வந்து உறவு கொள்­வ­தனை வழக்­க­மாக கொண்­டி­ருந்ததாகவும் இச்­சந்­தர்ப்­பத்தில் சம்­பவ தின­மான கடந்த 21 ஆம் திகதி தனது அறையில் காத­ல­னுடன் சல்­லா­பத்தில் ஈடு­பட்­டி­ருந்த சமயம் கொலை­யுண்ட பெண்­ணான தனது மாமி நேரில் கண்டு விட்­ட­தா­கவும் அச்­ச­மயம் மேற்­படி விடயம் கண­வ­ருக்குத் தெரிந்தால் விப­ரீ­த­மா­கி­விடும் என்று எண்­ணிய சந்­தேக நபர் உடனே மாமியின் கைகளைப் பிடித்து கொண்டு காத­ல­னிடம் அவரை கொலை செய்­யும்­படி கூறி­ய­தை­ய­டுத்து அதற்கு சம்­ம­திக்­காத காதலன் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யுள்ளார்.

பின்னர் சந்­தேக நபரே அரு­கி­லி­ருந்த ரீசேட்டை எடுத்து மாமியின் வாய் மற்றும் மூக்கு பகு­தியை அடைத்து மூச்சு திண­றலை ஏற்­ப­டுத்திக் கொலை செய்து விட்டு தப்­பி­யோ­டிய காத­ல­னுக்கு தொலை­பேசி அழைப்பை ஏற்­ப­டுத்தி உட­ன­டி­யாக நீ இங்கு வரா­விட்டால் நானும் தற்­கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி காத­லனை வர­வ­ழைத்­துள்ளார்.

பின்னர் மாமியின் உடலை சமை­ய­லறை பக்­க­மாக தூக்கிச் சென்று கயிறு ஒன்றில் கழுத்தை கட்டி தொங்­க­விட்­டு­விட்டு மறு நாள் 22 ஆம் திகதி பொலிஸ் அவ­சர சேவைப் பிரி­வுக்கு அழைப்பை மேற்கொண்டு தனது மாமி சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.