தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கட்டிக் கொடுத்த முஸ்லிம்களுக்கு ஜனாதிபதிடம் கிடைத்த பரிசு! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, June 7, 2019

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கட்டிக் கொடுத்த முஸ்லிம்களுக்கு ஜனாதிபதிடம் கிடைத்த பரிசு!

சாய்ந்தமருது பிரதேசத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் பற்றிய தகவல்களை வழங்கிய முஸ்லிம் இனத்தவர்கள் மூவருக்கு தலா 10 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் வழங்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்குமிடையே சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது, குறித்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 25 இலட்ச ரூபாய் நிதி அன்பளிப்பினை ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.