நீர்கொழும்பில் 402 ஐ போன் மற்றும் 17 ஆயிரத்து 400 சிம் அட்டைகள் , 60 ரவுட்டர்களுடன் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய எத்துக்கல பகுதியில் மேற்கொண்ட சோதனையின்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களிடமிருந்த குறித்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கைதுசெய்யப்பட்டவர்களில் சீன நாட்டவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.