பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மகாநாயக்க தேரர்களை சந்க்கவுள்ளனர்.
அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தவர்களை மீண்டும் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு நாட்டிலுள்ள மூன்று பீடங்களின் மகாநாயக்கர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் இருந்தால், கலந்துரையாடல்கள் மூலம் தீர்வைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தேரர்கள் அறிவித்திருந்தனர்.
அத்துடன் மகாநாயக்கர்களும் பதவி விலகிய முஸ்லிம் பிரதிநிதிகளை விரைவில் சந்திக்க தயாராகவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.