முஸ்லிம் தலைமைகள் தேர்தல் காலங்களில் பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டாலும் தேர்தல் முடிந்ததன் பின்னர் தமது சமூகம் சார்ந்த ஒரு குறிக்கோளுடனேயே செயற்படுவார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ இந்த நாட்டில் ஏற்பட்ட பயங்கரவாதம் ஒரு சமூகத்தினை கருவோடு அழிக்கும் செயற்பாட்டினைச் செய்துள்ளது. இன்னும் அந்த பயங்கரவாதம் முடிவடையவில்லை. அப்பாவி மக்களை நாங்கள் ஒருபோதும் குற்றம் சொல்வதில்லை. யாராகயிருந்தாலும் நீதியாகவும் நியாயமாகவும் செயற்படவேண்டும்.
நாங்கள் மக்களுக்குச் சேவை செய்யும்போது கட்சிபேதங்கள் காட்டத்தேவையில்லை. அரசியலில்தான் அந்தந்த கட்சிசார்ந்து திறமைகளை காட்டவேண்டும்.
முஸ்லிம் சமூக அரசியல்வாதிகளில் மூன்று பேருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் 21பேரும் பதவி விலகியுள்ளனர். தேர்தல் காலங்களில் பல்வேறு நோக்கங்களுடன் செயற்பட்டாலும் தேர்தல் முடிந்ததன் பின்னர் தமது சமூகம் சார்ந்த ஒரு குறிக்கோளுடனேயே அவர்கள் செயற்படுவார்கள்” என மேலும் தெரிவித்துள்ளார்.