நேற்று நாங்கள் இன்று நீங்கள்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, June 4, 2019

நேற்று நாங்கள் இன்று நீங்கள்!

முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்துக்கு இரையானது வருந்தத்தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள், நாளை இன்னொரு ‘மற்றவர்’. முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து தோழமையோடு நிற்போம். நேர்ச் சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கின்றோம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன்.

நேற்று மாலை அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய அவர், இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் சகலரும், அந்தப் பதவிகளைக் கூட்டாக இராஜிநாமா செய்துள்ளமை குறித்து இந்தப் பதிவை இட்டுள்ளார்.