நேற்றைய தினம் இலங்கை மீண்டும் ஒரு பரபரப்பையடைந்திருந்தது. சமீப காலமாக இலங்கை நாடு பல்வேறு அரசியல் பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அதன் உச்சமாக அதுரலிய ரதன தேரர் உண்ணாவிரதம் இருக்க நேற்றைய தினம் முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியிருந்தனர்.
இப்பதவி விலகலில் நாடு மிகவும், நிதானமாகவும், சாதுர்யமாகவும் நிலைமைகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஹக்கீம் கையாண்டு கொண்டார்.
இதற்காக மற்றைய முஸ்லிம் உறுப்பினர்களும் பொறுமையிழக்காது பேசிக் கொண்டிருந்தனர்.
நாட்டில் நல்லிணக்கமும், சமாதானமும் நிலைநாட்டப்பட வேண்டும். இனங்களுக்கிடையில் வன்முறைகளோ, முறுகல் நிலையோ ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஹக்கீமின் முடிவும், பேச்சுக்களும் நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது முஸ்லிம் அரசியல்பிரமுகர் ஒருவர் செயற்பட்ட விதம் சற்று சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஊடக சந்திப்பிற்காக அனைத்து முஸ்லிம் தலைவர்களும் வந்த போது, தனக்கான இருக்கையை சிறு பிள்ளை படம் பார்ப்பதற்கு அடி படுவது போல் ஓடி.. ஓடி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி எச்.எச்.எம்.ஹரீஸ் இடம் பிடித்துக் கொள்வதற்காக மாறி மாறி நகர்ந்து கொண்டது அங்கு பிரசன்னமாகிய அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் முகம் சுழிக்கத்தக்க வைத்த சம்பவம் அவருடைய கட்சியின் தலைவர் ஹக்கீமிற்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.
எச்.எச்.எம்.ஹரீஸ் நிதானமில்லாத அரசியல் வாதி எங்கு எதைக் கதைப்பது என்று தெரியாமல் போதையில் கதைப்பவர்கள் போல் பாராளுமன்றம் மற்றும் பொது இடங்களில் கதைப்பது பல முறை பாதகத்தில் முடிந்துள்ளது.
தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு குந்தகமாக செயற்படும் ஒரு கீழ்மட்ட அரசியல் வாதியான ஹரீசை என்ன செய்வது என்று தெரியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனிடம் கூறி கவலைப்பட்டுள்ளார் ஹக்கீம்.
முஸ்லிம் இனத்திற்கே சாபக்கேடு ரிசாட் , ஹிஸ்புல்லா, ஹரீஸ் அப்பாவி மக்களை தவறான கடும் போக்கில் வழி நடத்துபவர்கள் என்ன செய்வது என தெரியவில்லை என ஆதங்கப்பட்ட ஹக்கீம் ஒட்டு மொத்த சர்ச்சைகளிற்கும் காரணமாவதும் இவர்களே என கவலை வெளியிட்டுள்ளார்.
ரிசாட் - ஹரீஸ் நிதானம் இல்லாதவர்கள் என்பதற்கான ஆதாரம்...