ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கு இதுவரை தான் எந்த விண்ணப்பமும் முன்வைக்கவில்லை எனவும் கட்சியின் தலைமைத்துவத்துடன் தனது பெயர் பிரேரிக்கப்பட்டால் அது குறித்து ஆராயத் தயார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தனக்கு ஒருமித்து ஆதரவளிக்கும் பட்சத்தில் இதுகுறித்து தீர்மானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.